யாருக்கு ஓட்டு போடலாம்?
கொரோனா காலத்தில் பள்ளி கல்லூரிகளை மூடி ஆன்லைன் வகுப்பு நடத்த சொல்லி உத்தரவிட்ட அரசு ஏன் தேர்தல் பிரச்சாரத்தை இவ்வளவு மக்கள் கூட்டத்தில் வைக்கிறது என்ற கேள்வி எழும்போதே இது மக்கள் நலனுக்கான அரசா என்ற சந்தேகம் வருகிறது.ஏன் பிரச்சாரத்தையும் வேறு வழியில் நடத்தலாமே ?
சரி இனி இதை பற்றி பேசி பயன் இல்லை.
2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது இந்த சமயத்தில் அனைத்து கட்சிகளும் பல்வேறு வகையான வாக்குறுதிகளையும், அவர்களின் சேவை மனபான்மையவும் ஓட்டு கேட்டு சென்ற இடத்தில் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் மக்கள் அவர்கள் இதற்கு முன்பு செய்த கொடுமைகளையும், ஊழல்களையும் மறந்து ரசித்து கொண்டுதான் இருக்கின்றனர்.
எடுத்துகாட்டாக அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரும்போது பாஜக வின் மிக மோசமான மத மோதல்கள், அவர்களின் அருவருக்கத்தக்க மத பிரிவினைவாதம்(பாஜக வுடன் கூட்டணிவைத்துள்ளதால்) பற்றியோபொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு பற்றியோ தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றியோ கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை.
அதே போல், திமுக ஓட்டு கேட்டு வரும்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியோ, முந்தைய ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்தும், மற்றும் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டதை பற்றியோ கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை.
பாமகவினர் பற்றிய தர்மபுரி கலவரம் பற்றியோ, இட ஒதுக்கீடுகாக அவர்கள் ரயி்ல்நிலையத்தில் செய்த பிரச்சினை பற்றியோ கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை.
அதே போல் விடுதலை சிறுத்தைகள் ஓட்டு கேட்டு வரும் போது, ராஜபக்சே வுடன் சந்தித்த சந்திப்பு பற்றியோ அவரின் சரக்கு மிடுக்கு பேச்சு பற்றியோ, சைதாப்பேட்டை யில் ஒரு சமுதாத்தை பற்றி மிக கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி ஆர்பாட்டம் செய்ததை பற்றியோ கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை.
இதை போல் மாற்று அரசியல் பேசும் நாம் தமிழர் கட்சி சீமான், பாஜக விற்கு வாக்கு சேகரித்தல், அவரும் ஜாதி பார்த்து வேட்பாளர்களை அறிவிப்பது பற்றியோ, மற்றும் கருணாஸ் சாதிய பேச்சுக்களை பற்றியும் யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை.
அதேபோன்று மாற்று அரசியல் என்று பேசும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இலவசத்தை அவர்கள் அறிக்கையில் அறிவித்ததும் கேள்விக்குரியது.
பல சிறுபான்மை மக்கள் திமுக கூட்டணி மீதும், சில இந்து மக்கள் பீஜெபி மீதும் இவர்கள் தான் நமக்கு பாதுகாப்பானவர்கள் என்று நம்புவது வேடிக்கையாகவும், அதே நேரத்தில் வருத்தத்தையும் தருகிறது.
ஒரு தனிப்பட்ட கட்சியினர்தான் அவர்கள் தலைவர் செய்த எந்த ஒரு குற்றச்சாட்டையும் கேள்வி எழுப்பாமல் , அவர் தலைவர் கூறியது சரியா தவறா என்று கூட சிந்திக்காமல் உடனே அவர் செய்ததை குருட்டுத்தனமான ஆதரித்தார்கள் என்றால் மக்களும் அப்படியே இருப்பது வருத்தத்தை தந்தாலும் இது பெரிய ஆபத்து என்பதை உணர வைக்கிறது.
மறதி ஒரு தேசிய வியாதி என்று சொல்வதில் மிகையில்லை என்பது இதில் புரிகிறது.
யார் சொன்னாலும், எங்கு படித்தாலும், ஏன் நானே கூறினாலும் உன் புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே என்று கூறிய பெரியாரின் வார்த்தைகளை மறந்தது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
அதிலும் இப்போது அரசியல் பிரச்சாரத்தில் ஒவ்வொரு தலைவர்களும் மற்ற கட்சி தலைவர்களை மிகவும் தவறான வார்த்தைகளால் பேசும் பேச்சுக்கள் மிகவும் கண்டனத்திற்குரியது. இது போன்ற பேச்சுக்கள் மூலம் உண்மையில் அவர்கள் பொதுவான தலைவர்கள் தானா என்பதை உணர முடியும்.
எப்படியென்றால் எவனொருவன் நம் கட்சிக்காக என்று மற்றவர்களை காயப்படுத்தி பேசுகிறானோ அவன்தான் நாளை நம் ஜாதிக்காக என்றும் நம் மதத்திற்காக என்றும் பேச தொடங்குவான்.
இங்கு ஒரு முழுமையான அரசியல் கட்சி என்று எதையும் யாராலும் சொல்ல முடியாது, அதற்கு வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து என்ற அடிப்படையில் அதற்க்கு சாத்தியம் இல்லை என்பது எனது கருத்து.
சரி எல்லாரும் தவறானவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்றால், நன்கு பகுத்து அறிந்து, இவர் வந்தால் உங்கள் ஜாதிக்கு மட்டும் நல்லது, உங்கள் மதத்திற்கு மட்டும் நல்லது என்று யோசிக்காமல், யாரிடமும் கேட்காமல் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் குறைந்தபட்சம் அனைவரையும் மனிதனாக மதிக்கும் ஒருவரை தேடுங்கள். நமக்கு தேவை தன்னலமற்ற மனிதாபிமானமிக்க ஒரு தலைவன், அவன் அனைத்து ஜாதியையும் அனைத்து மதங்களையும் தவிர்த்து அனைவரும் மனிதர்கள் என்று எண்ணக்கூடிய ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.
இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் கிடைக்க உங்களை போன்றவர்களின்ஆதரவு முக்கியம் அதற்க்கு நீங்களும் தயாராகுங்கள்.


8 Comments
Why No Comments about MNM.....
ReplyDeleteAre they Geniune as per current updates India??
That's a good question. May be this article post is from MNM. 😂
Delete🤣🤣🤣
ReplyDeleteSuper
ReplyDeleteEna super summa eathavathu comment pannpannanumey nu comment panna vendiyathu...
DeleteReally nice.good guidance for voters.well done
ReplyDeleteReally nice.good guidance for voters.
ReplyDeleteYa I got an good idea....tq
ReplyDelete