ஆதார் எண் பான் கார்டு இணைப்பு தொடர்பான விவரங்கள்.
ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு இன்னும் 60 நாட்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆதார் பான் கார்டு இணைப்புக்கான கடைசி நாளாக இன்று அறிவித்திருந்த நிலையில் அதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
கடைசியாக பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது
தற்போதைய வருமான வரிச் சட்டத்தின்படி ஆதார் கார்டுடன் பான் எண் இணைக்கப்படாவிட்டால் அந்த பான் கார்டு செயலிழந்ததாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
ஆதார் எண் இணைப்பு தொடர்பான விவரங்களுக்கு :

0 Comments