தமிழகத்தில் புதிய மாவட்டம்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார்
2021 சட்டமன்ற தேர்தல் அறிவித்த நிலையில் அனைத்து வேட்பாளர்களும் அவர்களுக்கு உரிய தொகுதியில் பல்வேறு வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் கொடுத்துகொண்டு இருக்கின்றனர்.
![]() |
அதில் முக்கியமாக இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற உடன் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்குறுதி கொடுத்துள்ளார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடம்பூர் ராஜூவை எதிர்த்து தினகரன் போட்டியிடுவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் பல்வேறு வாக்குறுதிகளை அமைச்சர் கொடுத்து வருகிறார்
ஏற்கனவே தமிழகத்தில் 38 வது மாவட்டமாக கடந்த வருடம் மயிலாதுறை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இதில் கோவில்பட்டி மக்களும் கடந்த சில வருடங்களாக தங்களது ஊரை மாவட்டமாக அறிவிக்கக்கூறி பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு வை எதிர்த்து அமமுக கட்சியில் இருந்து டிடிவி தினகரன் அவர்கள் நிற்பதால் அதிமுகவிற்கு பெரிய சவாலாக இருந்த நிலையில் இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

0 Comments