தாலிக்கு தங்கம் திட்டம்’ – ரூ.50,000 நிதியுதவி
தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.
![]() |
| தமிழ்நாடு அரசு திருமண திட்டம் |
இந்த திட்டத்தின் நோக்கம்
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி வழங்குகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குதலும் பெண் கல்வி நிலையை உயர்த்துவதுமே மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் நோக்கம்.
இரண்டு வகையான திட்டங்கள்
அதாவது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தில் 10-ம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25,000 உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது அதேபோல் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50,000 உதவி தொகையும் 8 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்.
வயது நிபந்தனை
திருமணம் செய்துகொள்ளும் பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் ஆணிற்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம்.
தகுதிகள் நிபந்தனைகள்
திட்டம் 1
மணப்பெண் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம் தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
திட்டம் 2
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமானம்
72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும். மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் உதவி தொகை வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்.
தேவையான சான்றுகள்
- பள்ளி மாற்று சான்றிதழ்
- நகல் திருமண அழைப்பிதழ்
- வருமான சான்று
- பத்தாம் வகுப்பு படித்தவர்களாக இருப்பின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
- பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று
- குடும்ப அட்டை நகல் ஒன்று
- பாஸ்போர்ட் அளவில் ஒரு போட்டோ
அனைத்து வகையான திட்டங்களின் விண்ணப்ப நிலை அறிந்து கொள்ள..

0 Comments